சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் சுற்றுவட்டார பகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எழிலரசி இறுதி கட்ட பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இன்று (17.04.2024) பொட்டகவயல் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எழிலரசி பிரச்சாரம் மேற்கொண்ட போது பந்தய மாடுகளுக்கு மாலை அணிவித்து, பொட்டு வைத்து மரியாதை செலுத்தி கிராம மக்களிடையே வாக்கு சேகரித்தார். அப்போது பெண்கள் குலவையிட்டு வேட்பாளர் எழிலரசிக்கு வாழ்த்து கூறினர்.