மக்கள் நீதிமன்றம் மூலம் 1, 908 வழக்குகளுக்கு தீர்வு

74பார்த்தது
மக்கள் நீதிமன்றம் மூலம் 1, 908 வழக்குகளுக்கு தீர்வு
சிவகங்கை மாவட்டத்தில் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில்ஆட்சியரகபகுதியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் , 11 மக்கள் நீதிமன்றங்கள்இன்று மாலை சுமார் ஐந்து மணி வரை அமைக்கப்பட்டன. மாவட்ட நீதிபதி சொர்ணம் ஜெ. நடராஜன் தலைமை வகித்தார். இங்கு 176 குற்றவியல் வழக்குகள், 170 காசோலை மோசடி வழக்குகள், 309 வங்கிக் கடன் வழக்குகள், 142 விபத்து நஷ்டஈடு வழக்குகள், 180 குடும்ப பிரச்சினை வழக்குகள் என 3, 626 வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
இதில் 1, 804 வழக்குகள் தீர்க்கப்பட்டு, வழக்காடிகளுக்கு ரூ. 3, 75, 62, 471 வழங்க உத்தரவிடப்பட்டது. மேலும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வங்கிக் கடன் நிலுவை தொடர்பான 1, 145 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு, 104 வழக்குகள் தீர்க்கப்பட்டன. இதன்மூலம் ரூ. 93. 58 லட்சம் வங்கிகளுக்கு கிடைத்தது.

தொடர்புடைய செய்தி