பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் (சிஓஐடியு) சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை அரண்மனை வாசலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத்தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். மாநிலச்செயலர் காளிதாஸ் முன்னிலை வகித்தார்.
கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலப் பொதுச்செயலாளர் இரா. இராஜேந்திரன் பேசினார்.
கோரிக்கைகள்: தமிழக பொது சுகாதாரத்துறையின் கீழ் இயங்கி வரும் 108 அவசர சேவை திட்டத்தை எம்ரி-ஜிஎச்எஸ் என்ற தனியார் நிறுவனம் பிபிபி (பப்ளிக் பிரைவேட் பார்ட்னர்ஷிப்) ஒப்பந்த முறையில் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தி வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் 112 அவசர ஊர்திகள் மற்றும் ஒரு இரு சக்கர வாகன அவசர ஊர்தியும் இயங்கிக் கொண்டிருக்கிறது. அவற்றில் 176 -க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், நிர்வாகத்தின் இத்தகைய தவறை மறைப்பதற்காக தொழிலாளர்கள் மீது பாரபட்சமாக செயல்பட்டு வரும் மாவட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவகங்கை மாவட்டத்தில் இயக்கப்படும் 108 அவசர ஊர்திகள் பல்வேறு கோளாறுகளுடன் இயக்கப்படுவதால் அடிக்கடி பழுது ஏற்பட்டு நிறுத்தி வைக்கப்படுகிறது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாடட்த்தில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.