ஆட்சியர் மௌனத்திற்கு காரணம் என்ன? ஒட்டப்பட்ட போஸ்டர் வீடியோ

57பார்த்தது
சிவகங்கை அருகே உள்ள வேம்பங்குடி மற்றும் மாடக்கோட்டை கிராமங்களில் கிராவல் மண் கொள்ளையடிக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. இந்த மண் கொள்ளைக்கு அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாகவும், மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கத் தயங்குவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இது தொடர்பாக, சிவகங்கை நகரின் பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சியருக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டர்களில், "மண் மக்களுக்கு மட்டுமே, கொள்ளையர்களுக்கு அல்ல", "விருதுநகர் மாவட்ட ஆட்சியர் போல், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? " போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த மண் கொள்ளைக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கிராம மக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கிராம மக்கள் தரப்பில் கூறப்படுகிறது

கிராம மக்கள் தொடர் புகார்களை அளித்தும், போஸ்டர்கள் ஒட்டப்பட்டும், மாவட்ட ஆட்சியர் மௌனம் காப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.
நகர் முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு நிலவுகிறது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி