சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே வெற்றியூர் கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம், சின்ன ராஜா ஆகிய இரு வாலிபர்களும் அவர்களது இருசக்கர வாகனத்தில் செவல்புஞ்சை அருகே சென்றபோது ரோட்டின் ஓரத்தில் உள்ள மரத்தில் மீது இருசக்கர வாகனம் மோதியதாக கூறப்படுகிறது, இந்த விபத்தில் படுகாயம் அடைந்த இருவரை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் முருகானந்தம் உயிரிழந்தார், சின்ன ராஜா சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் முருகானந்தத்தின் தந்தை சென்னிமலை காளையார்கோவில் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் கணேச மூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.