மாநில நெடுஞ்சாலை ஆணையம் முடிவைக் கைவிடக் கோரி ஆர்ப்பாட்டம்

76பார்த்தது
சிவகங்கை மாவட்ட ஆட்சியரகப் பகுதியில் உள்ள நெடுஞ்சாலை கோட்டப்பொறியாளர் அலுவலகம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் முத்து முருகன் தலைமை வகித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 2023-24 -ஆம் ஆண்டு சட்டப்பேரவை கூட்டத் தொடரில் நெடுஞ்சாலைத் துறை மீதான மானிய கோரிக்கையில், தமிழக நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள சுமார் 12, 291 கிமீ. மாநில நெடுஞ்சாலைகளை ஆணையத்திடம் வழங்கினால், பொதுமக்கள் தங்களது வாகனத்திற்காக சுங்கக் கட்டணம் செலுத்த நேரிடும். அவ்வாறு சுங்கக் கட்டணம் செலுத்தினால் அத்தியாவசிப் பொருட்களின் விலை உயர்ந்து, விலைவாசி உயர்வை ஏற்படுத்தும். மாநில நெடுஞ்சாலை அமைக்கப்பட்டால் இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிபோகும் நிலை ஏற்படும்.

நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து, சுங்க சாவடியை தனியார் வசம் வழங்கும் போது சாலை பராமரிப்பு மற்றும் புதிய சாலை அமைக்கும் பணி இருக்காது. நெடுஞ்சாலைத்துறை மறு சீரமைப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

தொடர்புடைய செய்தி