மரக்கன்றுகள் நடும் பணியினை, துவக்கி வைத்த ஆட்சியர்

69பார்த்தது
சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒக்கூர் பகுதியிலுள்ள சருகனியாற்றின் கரையோரங்களில் மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தொடங்கி வைத்து தெரிவிக்கையில்:
சிவகங்கை மாவட்டத்தில், மழைக்காலங்களில் பெறப்படும் தண்ணீரை வீணாக்காமல் சேமிப்பதற்கு ஏதுவாகவும் வரத்துவாய்கால், கால்வாய்கள், ஏரிகள், மதகுகள் மற்றும் பிற நீர்நிலைகளை புனரமைத்தல், பலப்படுத்துதல் மற்றும் கலிங்குகள், மதகுகளை மறுகட்டுமானம் செய்தல், நீர்வழிகளில் அடைந்திருக்கும் செடிகளை அகற்றுதல், நீர்நிலைகளில் உள்ள சீமைக்கருவேல் மரங்களை அகற்றுதல் போன்ற பல்வேறுப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், அரசுடன் இணைந்து நீர்நிலைகளை பாதுகாத்திட ஊர் பொதுமக்கள், தனியார் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் தங்களது பங்களிப்பை அளித்து, எதிர்கால சந்ததியினருக்கு பயனுள்ள வகையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், நீர்நிலைகளை சீரமைக்கும் சிறப்பான பணியினை மேற்கொண்டு வருகின்றனர். ஒக்கூர் சருகனியாற்று கரையோரங்களில் சுமார் 1, 000 மரக்கன்றுகள் நடும் பணியும் மேற்கண்ட தனியார் பங்களிப்புடன் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி