சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ள மதுரை செல்லும் காலை பகுதியில் உள்ள தனியார் மஹாலில் தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்த உறுப்பினர் சேர்க்கை முகாமிற்கு சிவகங்கை தெற்கு மாவட்ட செயலாளர் காளீஸ்வரன் தலைமை தாங்கினார். தமிழக வெற்றிக் கழகத்தின் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் ஜாபர் பர்வேஸ் முன்னிலை வகித்தர் இந்த உறுப்பினர் சேர்க்கை முகாமில் பெண்கள், ஆண்கள், இளைஞர்கள் சீனா சுமார் 300-க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர்.