தமிழக அரசின் சார்பில் அவ்வப்போது பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதோடு ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு மற்றும் கூடுதல் பொறுப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் 56 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த டோங்கரே பிரவீன் உமேஷ், சென்னை லஞ்ச ஒழிப்புப் பிரிவு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த ஆஷிஷ் ராவத் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.