சிவகங்கையில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை

57பார்த்தது
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக சிவகங்கையில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் இன்று சிறப்பு தொழுகை நடைபெற்றது. சிவகங்கை வாலாஜா நவாப் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் பக்ரீத் சிறப்பு தொழுகையை மௌலானா முஹம்மது அன்சர் அவர்கள் தொழுகை நடத்தினார்கள் சிறப்பு சொற்பொழிவை மௌலானா பிலால் முஹம்மது அவர்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். வாலாஜா நவாப் ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் காஜா முகைதீன் தலைமையில் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. பள்ளிவாசல் வெளியே இருந்த ஏழைகளுக்கு தொழுகை முடிந்தவுடன் இஸ்லாமியர்கள் உதவி செய்தார்கள். பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்களின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான குர்பானி கொடுக்கப்பட்டு அதனுடைய இறைச்சிகளை பலருக்கும் கொடுத்து தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி