அய்யன் திருவள்ளுவரின் 133 அடி உயர திருவுருவச்சிலை முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் கன்னியாகுமரியில் நிறுவப்பட்டு, 25 ஆண்டுகள் நிறைவு வெள்ளி விழாவினை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற நிறைவு விழாவில், கவியோகி சுத்தானந்த பாரதி மாவட்ட மைய நூலகத்தில், பொது நூலகத்துறை இயக்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி அவர்கள் வழங்கினார்.
இதில் சிவகங்கை மாவட்ட நூலக அலுவலர்திருஞானசம்பந்தம், சிவகங்கை மாவட்ட மைய நூலகர் முத்துக்குமார், நூலக கண்காணிப்பாளர்சுவாமிநாதன், வாசகர் வட்ட தலைவர் அன்புதுரை, நூலக நண்பர்கள் திட்ட தன்னார்வலர் குழுவினர்ஈஸ்வரன், முத்து, கண்ணன், ரமேஷ் கண்ணன், ஆசிரியர் கண்ணப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.