அதிமுக சார்பில் வாளுக்கு வேலி அம்பலத்திற்கு மரியாதை

81பார்த்தது
இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி சர்வாதிகார போக்கை எதிர்த்து தமிழகத்தில் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு வீர மரணம் அடைந்த பாகனேரி வாள் கோட்டை நாட்டைச் சேர்ந்த வாளுக்கு வேலி அம்பலம் அவர்களின் பிறந்த ஜூன் மாதம் 10 ந்தேதி அரசு விழாவாக அனுசரிக்கப்படுகிறது. அதனடிப்படையில் இன்று அவரின் 223 வது பிறந்த நாள் விழாவாவை முன்னிட்டு அஇஅதிமுக சார்பில் கத்தப்பட்டு கிராமத்தில் உள்ள அவரது திரு உருவச்சிலைக்கு மாவட்ட கழக செயலாளர் செந்தில் நாதன் எம் எல் ஏ தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிட்ட சேவியர் தாஸ் ஒன்றியச் செயலாளர் ஸ்டீபன் அருள்சாமி கருணாகரன் மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் இளங்கோவன் தகவல் தொழில்நுட்ப அணி மண்டல துணை தலைவர் வெண்ணிலா சசிக்குமார் மற்றும் ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டுஇன்று மாலை சுமார் 5 மணியளவில் மரியாதை செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி