சிவகங்கை அருகே உள்ள மானாகுடியில் 15, 000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டி இடிந்து விழும் நிலையில் உள்ளதுஇந்த பகுதியில் 600-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் 1, 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்லும் மக்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் என அனைவரும் இந்த பகுதியை தினசரி கடந்து செல்கின்றனர். தண்ணீர் தொட்டி அருகே நியாய விலை கடை மற்றும் ஆரம்ப பள்ளி அமைந்துள்ளதால், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனர். எந்த நேரத்திலும் தண்ணீர் தொட்டி இடிந்து விழும் அபாயம் இருப்பதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர் இது தொடர்பாக பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அப்பகுதியில் உள்ள சாலையும் மோசமாக உள்ளதால் அவசர மருத்துவ தேவைகளுக்கு கூட மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, தண்ணீர் தொட்டியை சீரமைக்க வேண்டும் அல்லது அகற்ற வேண்டுமெனவும்சாலை வசதிகளையும் சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.