ஐயப்ப சுவாமி திருக்கோவிலில் புஷ்ப யாக விழா

79பார்த்தது
சிவகங்கை காந்தி வீதி பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ ஐயப்ப சுவாமி திருக்கோவிலில் மண்டல பூஜை விழாவை முன்னிட்டு புஷ்ப யாக விழா நடைபெற்றது முலவர் மற்றும் உற்சவர் ஐயப்ப சுவாமிக்கு துளசி சம்பங்கி செவ்வந்தி ரோஸ் வெள்ளை வண்ண அரளிப்பூ உள்ளிட்ட பல்வேறு நறுமண பூக்கள் கொண்டு புஷ்ப யாகத்தை நடத்தினர் பின்னர் சுவாமிக்கு சொடச உபசாரங்கள் செய்து அலங்கார தீபம் ஏக முக தீபம் கும்ப தீபம் ஒரு முகம் இரண்டு முகம் மூன்று முகம் உள்ளிட்ட
பல்வேறு தீப ஆராதனைகள் காண்பித்து நிறைவாக 108 சரண கோஷங்கள் முழங்க மகா பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டன இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ ஐயப்ப சுவாமியை வழிபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி