காளையார்கோவில்: சிறுபான்மைமக்கள் நலக் குழு சார்பில் விளக்க பொதுக் கூட்டம்

57பார்த்தது
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள தேரடிதிடல் பகுதியில் ஞானவாபி, சம்பல் மசூதிகளை பாதுகாக்க வலியுறுத்தியும் மணிப்பூரில் பழங்குடிமக்கள் மீதும் சிறுபான்மை கிறிஸ்தவ மக்கள் மீதும் தொடரும் வன்முறைத்தாக்குதலை தடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு சிறுபான்மையர்மக்கள் நலக்குழு சார்பில் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்திற்கு மாவட்டத்தலைவர் ஹுசைன் தலைமை வகித்தார். ராஜாமுகம்மது முன்னிலை வகித்தார். இந்தக் கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி