சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே சேத்தூர் - சூராணம் நெடுஞ் சாலையிலிருந்து கோர வலசைக்கு அரை கி. மீ. தூரத்துக்கு சாலை செல்கிறது. மாரந்தை அருகே குறுக்கே செல்லும் கண்மாய் கால்வாய் மீது தரைப்பாலம் உள்ளது. இப்பாலம் சேதமடைந்த நிலையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் நபார்டு கிராமச் சாலைகள் திட்டத்தில் ரூ. 1. 69 கோடியில் புதிய பாலம், சாலை அமைக்கப்பட்டது.
ஆனால், அச்சாலை ஒரே நாளில் சேதமடைந்தாகவும் கையில் தொட்டாலே பெயர்ந்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.