சிவகங்கை மாவட்ட அளவில் அரிசி, சர்க்கரை கார்டுகள் என 4 லட்சத்து 20 ஆயிரத்து 91 உள்ளன. இந்த கார்டுகளில் அரிசி வாங்கும் நபர்களுக்கு மட்டுமே பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இம்மாவட்டத்தில் உள்ள 829 கடைகளில் இப்பொங்கல் தொகுப்பினை 4 லட்சத்து 17 ஆயிரத்து 664 ரேஷன் கார்டுதாரர்கள் பெற உள்ளனர். இத்தொகுப்பில் கரும்பு, ஒரு கிலோ சர்க்கரை, பச்சரிசி வழங்கப்படுகிறது. இதற்காக நேற்று முதல் ரேஷன் கடை பணியாளர்கள் மூலம் டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்ற நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகப் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் டோக்கன் விநியோகத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.