சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இந்து அமைப்பினர் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றன.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை குறித்து இஸ்லாமிய மற்றும் இந்து அமைப்பினர் இடையே போட்டி எழுந்துள்ள நிலையில் இன்று இந்து அமைப்பினர் சார்பில் திருப்பரங்குன்றத்தில் போராட்டம் நடத்த போவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இது தமிழகம் முழுவதும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் அதனை தடுக்க காவல்துறையினர் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் இந்து அமைப்பினர் கைது செய்யப்பட்டு வருவதுடன் திருப்பரங்குன்றத்தில் தடையை மீறி கூட்டம் சேர வாய்ப்புள்ளதாக வந்த உளவு பிரிவு தகவலை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் எல்கைகளில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனை பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சிவகங்கை எல்கைப் பகுதிகளில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றன. தடையை மீறி இங்கிருந்து யாரும் திருப்பரங்குன்றம் செல்லாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.