வெளிநாட்டில் உயிரிழந்த கனவரின் உடலை மீட்டு தர கோரி மனு

79பார்த்தது
சிவகங்கையை அடுத்த கூட்டுறவுபட்டி, சிவல்பட்டி கிராமத்தை சேர்ந்த மெனாட்டான் என்பவரின் மகன் குமார். இவருக்கு லலிதா என்கிற மனைவியும் ஒரு பெண் குழந்தை மற்றும் ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் இவரது குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் துபாய் நாட்டிற்கு எலக்ட்ரீசியன் வேலைக்காக சென்றுள்ளார். பின்னர் கடந்த 2023 ஆம் ஆண்டு உடல் நிலை சரியில்லாததன் காரணமாக சொந்த ஊர் திரும்பியவர் மீண்டும் 3 மாதத்தில் துபாய் நாட்டிற்கே சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மனைவி லலிதாவின் செல்போன் எண்ணிற்கு அழைத்த குமாருடன் வேலை செய்யும் சக ஊழியர் குமார் இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவரது உடலை சொந்த ஊர் கொண்டுவர கோரி மனைவி லலிதா தனது இரு குழந்தைகளுடன் சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் வந்து ஆட்சியர் ஆஷா அஜித்தை சந்தித்து இன்று மதியம் சுமார் 2 மணியளவில் கண்ணீர் மழ்க மனு அளித்தார்.

தொடர்புடைய செய்தி