சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில் நாதன் அவர்கள், தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.7.50 லட்சம் ஒதுக்கி, களத்தூர் கிராமத்தில் புதிய நாடக மேடையைக் கட்டித் தந்துள்ளார். இந்நிகழ்வில் அவர் நேரில் கலந்து கொண்டு, நாடக மேடையை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் இளங்கோவன், ஒன்றியச் செயலாளர்கள் செல்வமணி, கோபி, ஸ்ரீதர் ஊராட்சி மன்றத் தலைவர் சோலையப்பன், ஒன்றிய இளைஞரணி செயலாளர், பொதுமக்கள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.