சிவகங்கை கோகுலேஹால் தெருவில் உள்ள சிருங்கேரி சாரதாபீடம் சங்கர மடத்தில் அக். 15 முதல் 24 வரை நவராத்திரி உற்சவம் மற்றும் லட்சார்ச்சனை நடைபெறும். நவராத்திரி உற்ஸவத்தை முன்னிட்டு இங்கு, தினமும் மாலை 6: 00 முதல் இரவு 8: 00 மணி வரை லலிதா சகஸ்ரநாம லட்சார்ச்சனை மற்றும்தீபாராதனை நடைபெறும். அக். 24 விஜயதசமி அன்று காலை 8: 00 முதல் மதியம் 12: 00 மணி வரை கணபதி, லலிதா, துர்கா ஹோமம் தம்பதி, சுவாசினி, கன்யா பூஜைகள்நடைபெறும். விழா கமிட்டியினர் ஏற்பாட்டை செய்து வருகின்றனர்.