மருதுபாண்டியர் கலையரங்கம் தேரடி திடல் பகுதியில் திறப்பு

77பார்த்தது
சிவகங்கை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட காளையார்கோவில் பேரூராட்சியில், தேரடி திடல் பகுதியில் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்த கலையரங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 15 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட இந்த கலையரங்கம் மருதுபாண்டியர் கலையரங்கம் என பெயரிடப்பட்டுள்ளது.

இது, சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் P. R. செந்தில் நாதன் அவர்களால், முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் அவர்களுடன் இணைந்து திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஒன்றியச் செயலாளர்கள் பழனிசாமி, ஸ்டீபன் அருள், புல்லுக்கோட்டை சிவாஜி, மாவட்ட பாசறை செயலாளர் பணக்கரை பிரபு, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இளங்கோவன், மருதுபாண்டியர் அறக்கட்டளை தலைவர் பெமினா நாகராஜன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி