காமராஜர் மக்கள் கட்சியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

73பார்த்தது
சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காமராஜர் மக்கள் கட்சியின் சிவகங்கை மாவட்டத் தலைவர் அருளானந்து தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செயலாளர் குமரய்யா கோரிக்கை முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்தார். கோரிக்கைகள் பல்வேறு வகைகளில் பின்தங்கியுள்ள தென் மாவட்டங்களில் சீரான வளர்ச்சியை உருவாக்கிட மதுரையில் தென் மண்டல வளர்ச்சி வாரியம் அமைக்க வேண்டும். காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தி விவசாயத்திற்கும், தென்மாவட்ட மக்களுக்கு தண்ணீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி மற்றும் பல்வேறு தொகுதிகளில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் உழவர் சந்தையை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி