நகை அடகு கடையில் ஒரு கோடி மதிப்பிலான நகைப் பணம் கொள்ளை

68பார்த்தது
சிவகங்கை அருகே மதகுபட்டியில் தச்சம் புதுப்பட்டி சாலையில் பாண்டித்துரை என்பவர் ஏழுமலையான் பைனான்ஸ் மற்றும் நகை அடகு கடை நடத்தி வருகிறார் இவர் இன்று காலை கடைக்கு வந்துள்ளார் அப்போது சுவற்றில் துளையிட்டு உள்ளே புகுந்து மிகப் பெரிய லாக்கரையும் உடைத்து நகைகளை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.
அதில் சுமார் ஒரு கோடி மதிப்பிலான நகை, பணம் ஆகியவை இருந்துள்ளதாக கூறப்படுகிறது எனவே பாண்டித்துரை
இந்த திருட்டு சம்பவம் குறித்து மதகுபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோப்ப நாய்கள், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு. கைரேகை மற்றும் தடயங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர் மேலும் தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவம் குறித்து இன்று மதியம் சுமார் ஒரு மணி அளவில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

தொடர்புடைய செய்தி