சிவகங்கை மறை மாவட்ட ஆயர் லூர்து ஆனந்தம் பேட்டி

71பார்த்தது
சிவகங்கை மறை மாவட்ட ஆயர் முனைவர் லூர்து ஆனந்தம் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்: ஒவ்வொரு குழந்தையும் அந்த வீட்டினுடைய எதிர்காலத்தின் நம்பிக்கை. அதே போலத்தான் இயேசு ஆண்டவர் அவருடைய குடும்பத்திற்கு மட்டுமல்ல உலகத்திற்கே எதிர்காலத்தின் நம்பிக்கையாக இந்த உலகிற்கு வந்தார். கடவுள் இந்த உலகை கைவிட்டு விடவில்லை என்பதனுடைய அடையாளம் தான் இயேசுவின் பிறப்பு எனவே ஆண்டவர் இயேசு இந்த உலகிற்கு கொண்டு வந்த நம்பிக்கை சமாதானம், அன்பு, மகிழ்ச்சி ஆகிய அனைத்து நலன்களும் ஒவ்வொருவருக்கும் கிடைக்க வேண்டும் என்று கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
தொடர்ந்து சிறுபான்மையினருக்கும் குறிப்பாக கிறிஸ்தவர்களுக்கென்று தமிழக அரசு செய்து வருகின்ற நல்ல பல திட்டங்களை நான் மனதார பாராட்டுகிறேன். குறிப்பாக நூறு ஆண்டு பழமையான தேவாலயங்களை புணரமைக்க தமிழக அரசு நிதி உதவி செய்து வருவது மிகவும் பாராட்டுக்குரியது.
இதற்கு தமிழக அரசுக்கும் தமிழக முதல்வருக்கும் மனதார பாராட்டுகிறேன் என சிவகங்கை மறை மாவட்ட ஆயர் லூர்து ஆனந்தம் தெரிவித்தார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி