சிவகங்கையில் செய்தியாளர்களிடம் எம்பி கார்த்திக் சிதம்பரம் தெரிவித்ததாவது: இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை சொன்னால் மோட்சம் கிடைக்காது. கடவுள் பெயரை சொன்னால் மோட்சம் கிடைக்கும் என்று கூறினார். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரின் பெயரை சொன்னால் மோட்சம் கிடைக்காது என்ற மனுஸ்மிருதியின் கருத்தை பிரதிபலிக்கிறார்கள் என்று வெளிப்படையாக தெரிகிறது. இதில் திரித்துக்கூற காங்கிரஸ் கட்சிக்கு அவசியம் இல்லை. மாநிலங்களவையில் அமித்ஷா பேசுவது முழுமையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மாநிலங்களவை டிவியிலும் இப்பதிவு உள்ளது. அதை பார்த்லே அவர் சொன்னது தெரியும். இதில் திரித்துக்கூற என்ன இருக்கிறது. அவர் என்ன பேசினார் என்பது காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல அனைவருக்குமே புரியும். இது காங்கிரஸ் கட்சியின் பிரச்சினை அல்ல. மனித உரிமை பிரச்சினை எனவே அமித்ஷா மீது பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் பதவி விலக வேண்டும் என்றார்.