வெள்ளையர்களால் அபகரிக்கப்பட்டிருந்த சிவகங்கை மண்ணை படைகளை திரட்டி போரிட்டு மீட்ட முதல் பெண் போராளியான வீரமங்கை ராணி வேலு நாச்சியாரின் 228 -வது நினைவு தினமானது அவரது நினைவிடத்தில் அமைந்துள்ள சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில் குருபூஜையாக அனுசரிக்கப்பட்டது.
முதலாவதாக பூஜையை அவர் வாரிசுதாரராக உள்ள சிவகங்கை சமஸ்தானம் மற்றும் தேவஸ்தான அறங்காவலரும் ராணி சாகிபா மதுராந்தகி நாச்சியார் மற்றும் மகேஸ் துரை ஆகியோர் அவரது நினைவிடத்தில் உள்ள வேலு நாச்சியாரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து அரண்மனை வளாகத்திற்குள் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வையும் துவக்கி வைத்தனர்.
இதனை தொடர்ந்து, ராமநாதபுரம் மன்னர் குடும்ப வாரிசு ஆதித்யா சேதுபதி, திமுக சார்பில் நகர்மன்றத் தலைவர் சிஎம். துரைஆனந்த், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜி. பாஸ்கரன் சிவகங்கை சட்டப்பேரவை தொகுதி அதிமுக உறுப்பினர் பி. ஆர். செந்தில்நாதன், தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், சமுதாய அமைப்பினர் திரண்டு மரியாதை செலுத்தினர்.