சிவகங்கை புத்தர் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் ( 46)
இவர் சிவகங்கை அரண்மனை வாசலில் உள்ள ஒரு ஸ்வீட் ஸ்டாலில் வேலை பார்க்கிறார்.
இவரது மனைவி எம்ஏ படித்துள்ளார். அதனால் பாஸ்கர் அவருக்கு வேலை கிடைக்குமா என்று தேடி வந்தார். பாஸ்கர் வேலை பார்க்கும் ஸ்வீட் ஸ்டாலுக்கு சிவகங்கையை அடுத்த இடையமேலூர் கிராமத்தைச் சேர்ந்த சரவணகுமார் (45) என்பவர் அடிக்கடி ஸ்வீட் வாங்க வருவார். அப்பொழுது அவருக்கு பாஸ்கர் உடன் பழக்கம் ஏற்பட்டது.
அப்போது சரவணக்குமார் தான் கருவூல அலுவலகத்தில் கணக்காளராக வேலை பார்ப்பதாக கூறியுள்ளார். பின்னர் அவர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள ஆதிதிராவிட நலத்துறை அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் வேலை காலியாக இருப்பதாகவும், வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் அந்த வேலை நிரப்பப்பட உள்ளதாகவும் பாஸ்கரின் மனைவிக்கு அந்த வேலை வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளார். இதை நம்பிய பாஸ்கர் கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரூ இரண்டு லட்சத்து 30 ஆயிரத்தை கொடுத்துள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்ட சரவண குமார் ஏற்கனவே கூறியபடி பாஸ்கரின் மனைவிக்கு வேலை வாங்கி தராமலும் வாங்கிய பணத்தை திருப்பி தராமலும் ஏமாற்றினாராம்.
இது தொடர்பாக சிவகங்கை நகர் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் சரவணகுமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.