சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகராட்சி சார்பாக ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மருதுபாண்டியர் பூங்காவில் இன்று முதலாம் ஆண்டு கோடை விழா தொடக்க விழா நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் துவக்கி வைக்கப்பட்டது.
அப்போது ஆட்சியர் உரையாற்றும் போது தமிழக முதல்வர் தமிழக மக்களின் நலன் கருதி எண்ணற்ற பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில்நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாகபொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. மேலும் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரசின் பல்வேறு துறை சார்பாக பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
அகன்அடிப்படையில் ஏற்கனவே உலகத்தில் அமைந்துள்ள மருதுபாண்டியர் பூங்காவினைதற்போது ரூபாய் 20 லட்சம் மதிப்பில் பல்வேறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுகோடைவிழாகொண்டாடும் வகையில்புதுமைபொலிவுடன்வடிவமைக்கப்பட்டுள்ளது. சிறுவர் சிறுமிகள் விளையாடுவதற்கான உபகரணங்கள் மற்றும் விலங்குகளின் உளவு சிலைகள் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் நடைபாதை என பல்வேறு வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பொழுதுபோக்கு அம்சமாக முதலாம் ஆண்டு கோடை விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் என வருகின்ற 17ஆம் தேதி வரை நடைபெற உள்ளதுஇந்த அரிய வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என உரையாற்றினார்.