கிராம ஊராட்சி மன்றத்தலைவர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம்

80பார்த்தது
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், கிராம ஊராட்சி மன்றத்தலைவர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில்: ஒவ்வொரு ஊராட்சிக்கும் அந்தந்தப் பகுதி மக்களால்தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றத்தலைவர்களின் வாயிலாக, சம்பந்தப்பட்ட ஊராட்சிகளில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சிப் பணிகள் குறித்தும், அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் அதன் நிலை குறித்தும், கூடுதலாக மேம்படுத்த வேண்டிய பணிகள் குறித்தும் மாவட்டத்திலுள்ள மொத்தம் 12 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 445 கிராம ஊராட்சிகளைச் சார்ந்த அனைத்துஊராட்சி மன்றத்தலைவர்களுடன் 3 மாதத்திற்கு ஒருமுறை கலந்தாய்வுக்கூட்டம் நடத்தப்படும் நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் ஒவ்வொரு ஊராட்சிக்கும் 15-வது நிதிக்குழு மானியத் திட்டம், உபரிநிதித் திட்டம், ஆதிதிராவிடர் மானியம்திட்டம், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித்திட்டம், பிரதம மந்திரி குடியிருப்புத்திட்டம், நமக்கு நாமே திட்டம், தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாடு திட்டம், நபார்டு-ஊரகஉட்கட்டமைப்பு வளர்ச்சி நிதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்உள்ளிட்டபல்வேறு திட்டங்களின்கீழ் நடைபெற்றுவரும்பணிகள் குறித்து கலந்தாய்வு மேற்கொள்ளப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி