பிஜேபி சிறுபான்மை பிரிவு தேசிய நிர்வாகியாக பதவி வகித்து வரும் வேலூர் இப்ராஹிம் சமீப காலமாக இனவாதத்தைத் தூண்டும் வகையில் பேசி வருவதாகவும், நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு வஃக்பு வாரிய தலைவருமான நவாஸ் கனி மீது அவதூறு பரப்பும் விதமாகவும் கொச்சையாக பேட்டி கொடுத்ததை கண்டித்தும், அவர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவுடன் சிவகங்கை மாவட்ட ஐக்கிய ஜமாத் செயலாளர் கலிலுர் ரகுமான் தலைமையில், காரைக்குடி ஐக்கிய ஜமாத்தை சேர்ந்த தலைவர் அப்துல் ரகுமான், செயலாளர் அலி மஸ்தான், பொருளாளர் சாதிக் பாட்ஷா மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸீஸ் ராவத்தை சந்தித்து புகார் மனு அளித்தனர்.