சிவகங்கையில் நேற்றைய தினம் வீரமங்கை வேலுநாச்சியாரின் 228 ஆவது குருபூஜை விழா சிவகங்கை அரண்மனை வாசலில் அமைந்துள்ள வேலுநாச்சியார் நினைவாலயத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு அரசியல் கட்சியினர், சமுதாயத் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டு வேலு நாச்சியாருக்கு மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியைச் சேர்ந்த முக்குலத்தேவர் புலிப்படை பொதுச் செயலாளரும் தேவர் மலர் மாத இதழ் நடத்தும் பாண்டித்துரை என்பவர் youtube சேனலுக்கு பேட்டி கொடுக்கை-யில் தமிழக முதல்வரை ஒருமையில் பேசியதோடு தென்மாவட்டத்தில் தமிழக முதல்வரால் மீண்டும் கலவரம் வெடிக்க உள்ளதாக பேசிய அந்த வீடியோ காட்சிகளோடு youtube பதிவு செய்து உள்ளார். சர்ச்சைக்குரிய அந்த வீடியோ காட்சிகளை சிவகங்கை நகர் திமுகவினர் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பனிடம் தெரிவித்துள்ளனர். இன்று அமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் புகார் மனுவாக கொடுத்தனர். தமிழக முதல்வரை ஒருமையில் பேசிய நபரின் மீது உடனடி நடவடிக்கை எடுத்து அந்த youtube காட்சிகளை நீக்கம் செய்ய வேண்டும் என்று சிவகங்கை நகர் செயலாளரும், நகர மன்ற தலைவருமான துரை ஆனந்த சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் கட்சி நிர்வாகிகளுடன் புகார் மனு அளித்துள்ளார் .