சிவகங்கை: மோசடி வழக்கு விவரங்களை சேகரிக்கும் சிபிஐ

51பார்த்தது
சிவகங்கை: மோசடி வழக்கு விவரங்களை சேகரிக்கும் சிபிஐ
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சமுதாயக்கூடத்தில் செவ்வாய்க்கிழமை மத்திய புலனாய்வுப் பிரிவு ஆய்வாளர் தினேஷ், உதவி ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்ட விசாரணை முகாமில் மத்திய பிரதேசத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த பரிவார் டெய்ரீஸ் அண்ட் அல்லைட் லிமிடெட் நிறுவனத்தினரால் சிவகங்கை மாவட்டத்தில் ஏமாற்றப்பட்ட பொதுமக்களின் விவரங்களை பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நேரில் வந்து தங்களிடம் இருந்த அசல் ஆவணங்களை கொடுத்து பதிவு செய்தனர். 

இதுகுறித்து மத்திய குற்றப் புலனாய்வுத்துறை ஆய்வாளர் தினேஷ் கூறியதாவது: ஜூன் 3 முதல் ஜூன் 7 வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த விசாரணை முகாம் நடைபெறுகிறது. எனவே பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் ஆவணங்களை கொண்டு வந்து பதிவு செய்து கொள்ளலாம் என்றார். இந்நிலையில், ஏதேனும் சந்தேகம் அல்லது தெளிவு தேவைப்பட்டால், அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு, மத்திய புலனாய்வுப் பிரிவை 044-24461959 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மத்திய புலனாய்வுத்துறை பொருளாதார குற்றப்பிரிவு பொது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி