மாட்டு வண்டி பந்தயம் -41 ஜோடி மாடுகள் பங்கேற்பு.

54பார்த்தது
சிவகங்கை அருகே மதகுபட்டி-கீழத்தெரு அய்யனார்கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்லை பந்தயம் நடைபெற்றது. மதகுபட்டியிலிருந்து ஒக்கூர் வரை நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் பெரிய மாடு பிரிவில் 14 மாட்டு வண்டிகளும், சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் 27 வண்டிகளும் பங்கேற்றன.
இதில், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட மாவட்டங் களில் இருந்து பெரிமாட்டு பிரிவில் 14 வண்டிகளும், சிறிய மாட்டுப் பிரிவில் 27 வண்டிகளும் மொத்தம் 41 பந்தய மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதில் பெரிய மாட்டு பிரிவுக்கு 8 கிமீ தொலைவும், சிறிய மாட்டு பிரிவிற்கு 6 கிமீ தொலைவும் பந்தய எல்லையாக நிர்ணயிக்கப் பட்டிருந்தது.
விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளை, மதகுபட்டி, நகரம்பட்டி, ஒக்கூர், சோழபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மாட்டு வண்டி பந்தய ஆர்வலர்கள் சாலையின் இரு புறங்களிலும் திரண்டு இருந்து உற்சாகமாக கண்டுகளித்தனர். பந்தயத்தின் முன்னும் பின்னும் ஏராளமான இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சென்றவாறு மாட்டு வண்டி சாரதிகளை உற்சாகப்படுத்தினர்.
போட்டியில் முதல் நான்கு இடங்களை பிடித்த மாட்டு வண்டியின் உரிமையாளர் களுக்கும் அதனை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் ரொக்க பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. போட்டிக்கான ஏற்பாடுகளை மதகுபட்டி கீழத்தெரு பொதுமக்கள், இளைஞர்கள் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி