பாரதிய ஜனதா கட்சியின் நகரச் செயலாளர் கைது

53பார்த்தது
திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் கோவில் சிக்கந்தர் தர்கா அமைந்துள்ளது சில நாட்களுக்கு முன்பு சிக்கந்தர் தர்காவில்ஆடு கோழி பலியிட்டு கந்தூரி விழா நடத்தப்படும் என தர்கா நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து
திருப்பரங்குன்றம் மலைக்கு ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி ஆட்களுடன் சென்ட்ரல் மலைப்பகுதியில் அசைவ உணவு சாப்பிட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியானது இவற்றால் திருப்பரங்குன்றம் மலைப் பிரச்சினை சர்ச்சையானது. இந்நிலையில் திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வலியுறுத்தி இன்று இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் 16 கால் மண்டபம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று பாரதிய ஜனதா கட்சியின் சிவகங்கை நகரச் செயலாளர் உதயா மற்றும்
கிழக்கு ஒன்றிய தலைவர்
நாட்டரசன் உள்ளிட்டோர் உழவர் சந்தை பகுதியில் சிவகங்கை நகர் போலீசார் கைது செய்து வீட்டு காவலில் வைத்துள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி