சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அருகே உள்ள அரசினி முத்துபட்டியை சேர்ந்தவர் அருள்ராஜ் (60) இவர் சிவகங்கையில் உள்ள பி. எஸ். எஸ் மஹால் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது அவ்வழியாக வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் அருள் ராஜ் வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்படுத்தியதாக அவரது மகன் அருள் ஆரோக்கிய செல்வம் சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் இப் புகாரின் பெயரில் சிவகங்கை நகர் காவல் நிலைய எஸ். ஐ ஜானகி ராமன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்