சிவகங்கை அண்ணாமலை நகரில் உள்ள கீழ்பாத்தி அருள்மிகு ஸ்ரீ நானம்மாள் சமேத நானேஸ்வரர் சுவாமி திருக்கோவிலில் ஆடி பெருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பால்குடம் பூக்கரகம் அக்னி சட்டி எடுத்து அம்மனுக்கு சமர்ப்பித்து வழிபாடு செய்தனர் இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் திருவிழா நடைபெற்று வருகிறது இந்த ஆண்டு கடந்த 19ஆம் தேதி அன்று காப்பு கட்டுதல் வைபவத்துடன் விழா துவங்கியது விழா நாட்களில் சுவாமி அம்மனுக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது விழாவின் சிகர நிகழ்ச்சியான காப்பு கட்டி விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் பால்குடம் அக்னிசட்டி பூக்கரகம் எடுத்து மங்கள வாத்தியங்களுடன் ஊர்வலமாக வலம் வந்து கோவிலை அடைந்தனர் தொடர்ந்து பக்தர்கள் சமர்ப்பித்த பாலால் சுவாமி அம்பாளுக்கு அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரம் நடைபெற்றன பின்னர் தீப தூப ஆராதனை காண்பித்து சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது இவ்விழா முன்னிட்டு அன்னதானம் கலை நிகழ்ச்சிகள் மாட்டு வண்டி பந்தயம் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது இவ்விழாவை தலைவர் முருகன் விழா கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் அண்ணாமலை நகர் பொதுமக்கள் செய்திருந்தனர் சுற்றுவட்ட பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வரை சுவாமி அம்மனை வழிபட்டனர்.