தனுஷ்கோடி முதல் கன்னியாகுமரி வரை விழிப்புணர்வுசைக்கிள் பயணம்

0பார்த்தது
சிவகங்கை மாவட்டம், இலுப்பக்குடியில் உள்ள இந்தோ திபெத் எல்லைக் காவல் படை சார்பில் தமிழக தென் கடலோரப் பகுதியில் தனுஷ்கோடி முதல் கன்னியாகுமரி வரை சைக்கிள் பயணத்தை ஜூலை 8 முதல் 14 வரை நடத்துவதாக இந்தோ திபெத் எல்லைக் காவல் படை பயிற்சி மையத்தின் காவல் துறை துணைத் தலைவர் (டிஐஜி) டி. ஜஸ்டின் ராபர்ட் தெரிவித்தார்.
இலுப்பக்குடியிலுள்ள இந்தோ திபெத் எல்லைக் காவல் படை பயிற்சி மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு முகாமை தொடக்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியதாவது:
உள்துறை அமைச்சகத்தின் கீழ், இந்தோ திபெத்திய எல்லை காவல் படை எல்லைப் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகிறது. வடகிழக்கு பிராந்தியத்தில் (மொத்தம் 3, 488 கிமீ) கரகோரம் கணவாய் முதல் ஜாசெப் லா வரையிலான நில எல்லையை பாதுகாக்கிறது.
சத்தீஸ்கர், மணிப்பூர், பஞ்சாப் போன்ற பல்வேறு உள் பாதுகாப்பு பணிகளுக்கும், முக்கிய நிறுவனங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பிற்கும் இப்படை பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், தனுஷ்கோடி முதல் கன்னியாகுமரி வரையிலான கடலோரப் பகுதியை உள்ளடக்கிய ஒரு சைக்கிள் பயணம் 8. 7. 2025 முதல் 14. 7. 2025 வரை, இந்தோ திபெத்திய எல்லை காவல் படை சார்பில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் உடற்தகுதி குறித்த சந்தேகங்களைக் கேட்டு விளக்கம் பெற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி