தேர்வு மையத்தில், ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்

80பார்த்தது
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில்,   இன்று நடைபெற்ற தொகுதி -4 தேர்விற்கான,   சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி தேர்வு மையத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், இன்று மதியம் சுமார் 12 மணியளவில்   பார்வையிட்டு ஆய்வு  மேற்கொண்டு தெரிவிக்கையில்: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் 144 தேர்வு மையங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் அமைக்கப்பட்டிருந்தன. தேர்விற்கு விண்ணப்பித்திருந்த 39, 243 தேர்வாளர்களுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டதில் 30, 744  (78%)  தேர்வாளர்கள் தேர்வில் கலந்து கொண்டனர். 8499 நபர்கள் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. என மாவட்ட ஆட்சித்தலைவர்                                  ஆஷா அஜித்,   தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி