அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

73பார்த்தது
அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் 	சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற மாலை நேர ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத்தலைவர் பி. ஜெயமங்களம் தலைமை வகித்தார்
மாவட்டப் பொருளாளர் சி. லட்சுமி, மாநில செயற்குழு உறுப்பினர் ஏ. கௌசல்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் எஸ். உமாநாத் தொடக்கவுரையாற்றினார்.
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்க மாநிலச்செயலாளர் இ. பாக்கியமேரி சிறப்புரையாற்றினார். சிஐடியு மாவட்டச்செயலர் ஏ. சேதுராமன் நிறைவுரையாற்றினார். நிர்வாகிகள் ஏ. தவமலர், பி. கே. மலர், வி. சசிகலா, எம். சித்ரா, வி. ராதா, ஏ. கலைச்செல்வி, பி. சித்ரா உள்பட திரளானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
கோரிக்கைகள்: அங்கன்வாடி திட்டத்தை தனியார் மயமாக்கும் வகையில் மத்திய அரசு நிறைவேற்றிய சட்டத்தை வாபஸ் வாங்க வேண்டும். அங்கன்வாடி திட்டத்தை தனியார்மயமாக்க நினைக்கும் மத்திய அரசிற்கு தமிழக அரசு துணை போகக்கூடாது. குறைந்தபட்ச ஊதியமாக ஊழியர்களுக்கு ரூ. 26, 000/-ம் உதவியாளர்களுக்கு ரூ. 18, 000/- வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணிக்கொடை ரூ. 10 லட்சம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் ரூ. 8, 000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். அனைத்து அங்கன்வாடி ஊழியர்களுக்கும் துறை சார்ந்த பணிகளை விரைந்து முடிக்க புதிய செல்பேசி வழங்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி