ஊழியர் விரோதப்போக்கில் செயல்படும் சிவகங்கை மாவட்டம், கல்லல் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மீது நடவடிக்கை கோரி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோரிக்கைகள்: சிவகங்கை மாவட்டம், கல்லல் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தற்காலிக பணிநீக்க உத்தரவை, இரத்து செய்திடக் கோரியும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள திட்ட அலுவலகம் எதிரில் நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ஜெயமங்களம் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச்செயலர் ஏ. சேதுராமன் தொடக்கி வைத்தார்.
சிஐடியு மாவட்டத்தலைவர் ஆர். வீரையா, பொருளாளர் எம். தெட்சிமணாமூர்த்தி, கோட்டீ மாநில செயலர் எஸ். உமாநாத், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்க மாநில பொருளர் எஸ். தேவமணி, அரசு ஊழியர்சங்க மாவட்டச்செயலர் ஆர். ராதாகிருஷ்ணன் ஆகியோர் கண்டனஉரையாற்றினர். அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்க மாநில பொதுச்செயலர் டி. டெய்சி கண்டன நிறைவுரையாற்றினார். இதில், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்த நூற்றுக்கணக்கான ஊழியர்கள் கலந்து கொண்டனர்.