சிவகங்கை அருகே உள்ளது படமாத்தூர் பி. வேலங்குளம் கிராமம். இங்கு சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் இங்குள்ள அங்கன்வாடி மையத்திற்கு 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வந்த நிலையில் தற்போது வெறும் 10 குழந்தைகள் மட்டும் வருகின்றனர். அங்கன்வாடி கட்டிடம் அமைந்துள்ள இடம் முட் புதராகவும் , மயானக்கரை செல்லும் பாதையாகவும், சிலைமடைந்து காணப்படுவதாலும் விஷ ஜந்துக்கள் உலாவுவதாலும் குழந்தைகளை பெற்றோர் அங்கன்வாடி மையத்திற்கு அனுப்ப பயந்து கொண்டு அனுப்புவதில்லை. மேலும் குடிநீர் வசதி இல்லை, மின்சார வசதி இல்லை, கழிப்பரை வசதி இல்லை, குடிப்பதற்கு சமைப்பதற்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து தலைச் சுமையாக தண்ணீர் கொண்டு வந்து குழந்தைகளை பாதுகாக்க வேண்டியுள்ளது. அடிப்டை தேவைகள் இன்றி அங்கன்வாடி மையமானது இயங்குவதால் குழந்தைகள் அவதிக்குள்ளாகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்திலேயே குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்பி வைக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் அங்கன்வாடி மையத்தை சீர் செய்து அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என கிராம மக்கள் இன்று கோரிக்கை விடுத்துள்ளனர்.