சிவகங்கை: அனைத்திந்திய இளைஞர் பெரு மன்ற வட்டார மாநாடு

81பார்த்தது
சிவகங்கை: அனைத்திந்திய இளைஞர் பெரு மன்ற வட்டார மாநாடு
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சிவகங்கை வட்டார மாநாடு சத்தியமூர்த்தி தெருவில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. 

சிவகங்கை சத்தியமூர்த்தி தெருவில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மாநாட்டுக்கு நிர்வாகி முத்து தலைமை வகித்தார். இந்த மாநாட்டில், வட்டாரத் தலைவராக அருண்குமார், செயலாளராக முத்து, துணைத் தலைவராக அஜித்குமார், துணைச் செயலாளராக ஐயப்பன், பொருளாளராக செந்தில்முருகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 

இந்த மாநாட்டில் படித்து முடித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை மத்திய, மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும். அனைவருக்கும் கட்டணமில்லா கல்வியை வழங்க வேண்டும். தமிழகத்தில் அதிகரித்து வரும் போதைப் பழக்கத்தை கடும் நடவடிக்கைகள் மூலம் தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ந்து சட்டம், ஒழுங்கு சீரழிந்து வருவதை காவல்துறை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்புடைய செய்தி