செய்தி எதிரொலியால் பஜனைமடத்தெரு பகுதியில் குவியும் உதவிகள்

74பார்த்தது
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பஜனைமடத்தெருவைச் சேர்ந்த அங்குச்சாமி – ராமேஸ்வரி தம்பதியினர், மூன்று மகள்களுக்கு பெற்றோராக உள்ளனர். தந்தை அங்குச்சாமி திண்டுக்கல்லில் கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுடைய மூத்த மகள் பரமேஸ்வரியின் திருமணம் எதிர்வரும் ஜூன் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தநிலையில் கடந்த மாதம் 27ஆம் தேதி வீட்டில் சமையல் செய்யும் போது திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் வீடு மற்றும் வீட்டில் இருந்த புதிய திருமண உடைகள், நகைகள், பணம், சீர் வரிசை பொருட்கள் என அனைத்தும் எரிந்து சாம்பலானது. இதனால் திருமண ஏற்பாடுகள் முற்றிலும் தடைபட்டு, குடும்பமே வேதனையில் மூழ்கியது.
இச்சம்பவம் குறித்து பப்ளிக் ஆப்பிள் வெளியான செய்தியின் பின்னர், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 324 லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள் இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ₹1, 26, 000 ரொக்கமாகவும் ₹80, 000 மதிப்புள்ள கல்யாண சீர் வரிசை பொருட்களையும் வழங்கினர்.
மேலும், இது தொடர்பான செய்தி அறிந்த பலரும் நேரிலும், தொலைபேசியின் மூலமாகவும் இந்த குடும்பத்திற்கு நிதியுதவிகளை வழங்கி வருகின்றனர். அதன்மூலம், திருப்புவனம் பகுதியைச் சேர்ந்த பிரபல நாடக நடிகரும் சமூக ஆர்வலருமான பபூன் எம். கே. ஆர் எனும் எம். ராதாகிருஷ்ணன் ரூ. 2, 000 வழங்கி தனது ஆதரவை வெளிப்படுத்தினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி