மூதாட்டியிடம் மூன்று பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

573பார்த்தது
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே நெடுவத்தாவைச் சேர்ந்த பிச்சை மனைவி லட்சுமி (60). இவர் நேற்று முன்தினம் காலை தனது பேத்தியுடன்நெடுவத்தாவு விநாயகர் கோவில் பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் பாய் அலசிக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள். லட்சுமியிடம் பேச்சு கொடுத்து, 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்றதாக லட்சுமி காளையார் கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில்காவல் உதவி ஆய்வாளர் பன்னீர்செல்வம் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி