பக்ரீத் பண்டிகையை வைத்து நூதன மோசடி

64பார்த்தது
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்த 'ஆயிஷா ஆட்டுப் பண்ணை' என்ற தனியார் நிறுவனம், கடந்த பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ரூ. 8, 000 செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு, ஓர் ஆண்டுக்குப் பிறகு ரூ. 16, 000 மதிப்புடைய ஆடு வீடுகளுக்கு நேரடியாக வழங்கப்படும் என விளம்பரங்கள் மூலம் நூதன திட்டம் அறிவித்தது. இந்த திட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெரும்பாலும் சிவகங்கை, மதுரை, இராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த இஸ்லாமியர்கள். குறிப்பாக, சிவகங்கையைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் இதில் பணம் செலுத்தியுள்ளனர். ஆடுகள் வழங்கப்படாமல் ஏமாற்றம்:
பண்ணை நிர்வாகம் ஆடுகளை டெலிவரி செய்யப்போவதாக தகவல் தெரிவித்த நிலையில், பணம் செலுத்தியவர்கள் அனைவரும் ஆடுகளுக்காக காத்திருந்தனர். ஆனால், பண்ணை நிர்வாகிகள் செல்போன்களை அணைத்து, இடத்தை விட்டு மாயமாகி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஏராளமான மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல நேர்ந்தது.
சிவகங்கை நகரில் வழக்கமாக 300க்கும் மேற்பட்ட ஆடுகள் குர்பானி செய்யப்படும் நிலையில், தற்போது வெறும் 100 ஆடுகள் மட்டுமே குர்பானி செய்யப்பட்டுள்ளது. ஏமாற்றப்பட்ட மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலும், இந்தச் சூழ்நிலை உருவானதாக கூறப்படுகிறது.
பல ஆண்டுகளாக பக்ரீத் அன்று குர்பானி வழங்கி வந்தோர், இந்த ஆண்டு அது சாத்தியப்படவில்லை என்பதனால் மனவேதனையில் உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி