40 கிலோ அழுகிய நிலையில் கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்

71பார்த்தது
சிவகங்கை உழவர் சந்தை, மஜித் ரோடு பகுதியில் கெட்டுப்போன மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக அடிக்கடி புகாா்கள் வந்ததையடுத்து, சிவகங்கை உணவுப் பாதுகாப்பு அலுவலா் சரவணக்குமாா் தலைமையில்மீன் வள உதவி இயக்குனர் ஞானம் , மீன் வள ஆய்வாளர்கள் சதீஸ்குமார் அண்ணாத்துரை,
நகராட்சிப் பணியாளா்கள், உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் உழவர் சந்தை பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினா்.
அப்போது மீன் கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 40கிலோ கெட்டுப்போன மீன்களை பறிமுதல் செய்து, பினாயில் ஊற்றி அழித்தனா். இவற்றை விற்பனை செய்த கடைக்காரா்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி