காளையார்கோவிலில் வடமாடு மஞ்சுவிரட்டு 4 பேர் காயம்

53பார்த்தது
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் காளைகளை அடக்க முயன்ற நான்கு பேர் காயமடைந்தனர்.
காளையார்கோவில் சௌந்தரநாயகி அம்மன் கோயிலில் வைகாசி தெப்பத் திருவிழாவை முன்னிட்டு, பொதுமக்கள் சார்பில் இந்த மஞ்சுவிரட்டு போட்டி நடாத்தப்பட்டது.

இந்த போட்டியில் திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 15 காளைகள் மற்றும் 135 வீரர்கள் பங்கேற்றனர். வட்ட வடிவத்தில் அமைக்கப்பட்ட மைதானத்தின் நடுவே கட்டப்பட்ட காளையை, 25 நிமிடங்களுக்குள் 9 பேர் கொண்ட மாடுபிடி வீரர்கள் அடக்கவேண்டும் என விதிமுறை இருந்தது.

போட்டியின் தொடக்கத்தில் களம் இறங்கிய காளைகளை அடக்க முயன்ற போது நான்கு வீரர்கள் காயமடைந்தனர்.

போட்டியில் காளைகளை வெற்றிகரமாக அடக்கிய மாடுபிடி வீரர்கள் மற்றும் அடங்க மறுத்த காளையின் உரிமையாளர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்த வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை காளையார்கோவில், மாந்தாளி, மேட்டுப்பட்டி, ஊத்திக்குளம், புலிக்கண்மாய், வலையம்பட்டி, கொல்லங்குடி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஆர்வலர்கள் உற்சாகமாகக் கண்டுகளித்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி