சிவகங்கை மாவட்டத்தில் குரூப்4தேர்வை 39, 242பேர் எழுதுகின்றனர்

587பார்த்தது
சிவகங்கை மாவட்டத்தில் குரூப்4தேர்வை 39, 242பேர் எழுதுகின்றனர்
சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 9) நடத்தப்படும் குரூப்-4 தேர்வை 39, 242 பேர் எழுதுகின்றனர். மாநில நிர்வாகத்தில் பல்வேறு துறைகளில் உள்ள 6, 244 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.

இதன்படி, இன்று (09.06.2024) ஒரே கட்டமாக தேர்வு நடத்தப்படும் இதற்காக, சிவகங்கை மாவட்டத்தில் 9 வட்டங்களில் மொத்தம் 144 மையங்கள் அமைக்கப்பட்டு, 39,242 பேர் தேர்வு எழுதுகின்றனர் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்ததுள்ளது.

தொடர்புடைய செய்தி