சிவகங்கை: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் மீது வழக்கு
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள தாயமங்கலம் ரோடு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மானாமதுரை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் மானாமதுரை காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் அகிலன் மார்ட்டின் ரோந்து பணி மேற்கொண்டுள்ளார். அப்போது சேதுபதி நகர் பகுதியைச் சேர்ந்த அறியவேல் வயது (28) என்பவர் விற்பனைக்காக 150 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. அதன் அடிப்படையில் அவரை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.